Thursday, October 1, 2015

'சிவப்புக்கல் மூக்குத்தி' தமிழ் காமிக்ஸ் புத்தக விமர்சனங்கள் மற்றும் கருத்துக்கள்

முன்குறிப்பு:
நந்தினியின் 'சிவப்புக்கல் மூக்குத்தி' டிஜிட்டல் தமிழ் ஃக்ராபிக் நாவல் (முழு நீள தமிழ் காமிக்ஸ் மின் புத்தகம்) MB Comics Studio இணையதளத்தில் இரண்டு வகையான மின்னூல் வடிவங்களில் கிடைக்கிறது.
1. PDF - இதனை ஸ்மார்ட் ஃபோன், டாப்லெட், கம்ப்யூட்டர், லேப்டாப், என எல்லா கருவிகளிலும் டவுன்லோட் செய்து படிக்கலாம். ஒரு சில பக்கங்களில், காமிக்ஸ் ஓவியங்கள் இரண்டு பக்கங்களிலும் விரிந்த வண்ணம் வரையப்பட்டிருப்பதால், படிப்பதற்கு முன், உங்கள் PDF ரீடர் ஆப்ஷன்களில் 'Cover Page' மற்றும் 'Two Page View' தெரியும்படி வைத்துக்கொள்ளுங்கள்.
2. Kindle - கிண்டில் ஃபயர், கிண்டில் பேப்பர் வயிட் போன்ற இ-புக் ரீடர் வைத்திருப்பவர்கள், இந்த காமிக்ஸ் புத்தகத்தை அமேசான் கிண்டில் மின்னூல் வடிவில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். கிண்டில் இ-புக் ரீடர் இல்லாதவர்கள் ஐபோன், ஐபேட், ஆண்ட்ராய்ட் சாதனங்களில் இலவசமாக கிடைக்கும் 'கிண்டில் ரீடர் App'  ஒன்றை டவுன்லோட் செய்து, அதில் கூட படிக்கலாம்.
Sivappu Kal Mookuthi - Tamil Comic Book
Sivappu Kal Mookuthi - Tamil Comic Book

விமர்சனங்கள் / கருத்துக்கள்


Uma Shakthi

Journalist, Sr.Content Editor, Dinamani.
Uma Shakthi - Tamil Comics
லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ், (அதற்கடுத்த காலகட்டத்தில் ஆர்ச்சிஸ்) இவையெல்லாம் என் பள்ளிநாட்களின் பைபிள் புத்தகங்கள். ரத்னபாலா, பாலமித்ரா, அம்புலிமாமா, பூந்தளர் இவைகளில் வரும் கார்டூன்கள் என் மனக்குகையில் நீங்கா இடம் பிடித்திருந்தன அற்புத சித்திரங்கள். கபீஷ் நீ எங்கிருக்கிறாய் என்று நான் தேடுப் பார்த்தால் இதோ தான் இருக்கிறேன் என்று வெளிவந்து சல்யூட் அடிக்கும். பால்யத்தை தொலைக்காமல் பொத்தி வைத்திருக்கும் மனத்துடையவர்களுக்கு வாழ்க்கை கலாபூர்வமாகவும் ரசனை நிரம்பியதாகவும் இருக்கும். இயக்குநர் ஜெ.எஸ்.நந்தினி அத்தகையவர். மல்டி டேலண்டெட் பர்சனாலிட்டி. அவருடைய திரைப்படமான திரு திரு துறு துறு பெண்களால் நகைச்சுவையாக சிந்திக்க முடியாது என்ற பொதுப்புத்தியை சுக்குநூறாக்கியது. சீன் பை சீன் நான் மிகவும் ரசித்த படம் அது.
நந்தினியிடமிருந்து புதுமையாக ஒரு படைப்பு என்ற போது நிச்சயம் அது தனித்துவமாக இருக்கும் என்று நினைத்து அவரை தொடர்பு கொண்டேன். சிவப்புக் கல் மூக்குத்தியின் மின் பிரதியை உடனே எனக்கு அனுப்பிவைத்தார். உடனே டவுன் லோட் செய்து ஒரே மூச்சில் படித்து முட்டேன். வாசிப்பில் எத்தனையோ அனுபவங்கள், ருசிகள் அறிந்திருந்தேன் ஆனாலும் இது முற்றிலும் புதிய அழகான அனுபவமாக இருந்தது. என்னுடைய அலுவலக கம்யூட்டரின் மானிட்டர் பெரியது. அதில் ஒவ்வொரு பக்கத்தையும் மின்னல் வேகத்தில் படித்து முடித்தேன். படத்தின் கதையை ஸாரி நாவலின் கதையைச் சொல்லிவிட்டால் சுவாரஸ்யம் போய்விடும். நீங்களே படித்துக் கொள்ளுங்கள். ஒரு வரியில் சொல்வதென்றால் அன்பும் காதலும் உடைய இணைபிரியாத இளம் தம்பதிகள் கணவனின் வேலை நிமித்தமாக அவனுடன் ஒரு எஸ்டேட்டுக்கு பயணப்படும் மனைவி. அங்கு அவளுக்கு ஏற்படும் வித்யாசமான அனுபவம். அவள் கரங்களில் கிடைக்கும் ஒரு ‘சிவப்புக் கல் மூக்குத்தி’ - இந்தச் சம்பவங்களின் பின்னனியில் அழகான த்ரில்லர் கதையொன்றை கச்சிதமாக வடிவமைத்துள்ளார் நந்தினி.
இந்த நாவலில் என்னை வெகுவாக கவர்ந்தது டயலாக். டிஜிடல் கிராபிக் நாவல்தானே காட்சிகளில் மட்டும் பிரம்மாண்டம் காட்டிவிடலாம் என விட்டுவிடாமல் வசனத்திலும் கவனம் செலுத்தியுள்ளார் நந்தினி. அதிலும் முக்கியமாக நாயகன் காதல் தோல்வியில் திருமணத்திற்குத் தயங்கும் போது அவன் பெண் பார்க்க வந்த மாயா (நாயகி) அவனிடம் கூறும் விஷயங்கள் மிகவும் அருமை. எதார்த்ததிலிருந்து நழுவாமல் அதே சமயம் எவ்வித தொய்வும் இல்லாமல் பர பர சுறு சுறு வென்று ஒரு படைப்பை நம் முன் காலத்துக்கு ஏற்ற டெக்னாலஜி வடிவில் படைத்திருக்கிறார். கரும்புத் தின்ன கூலியா என்பது போல வாசிக்கக் கசக்குமா என்ன...காமிக்ஸ் விரும்பிகள் உடனடியாக படிக்க வேண்டிய ஆக்கம் இது.
தத்ரூமாக காட்சிகளைக் காண வைத்த இயக்குநர் நந்தினிக்கும் அவருடைய டீமுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள். வெகுநாள் கழித்து இப்படியொரு அதிசய உலகத்திற்குள் அழைத்துச் சென்ற அந்த படைப்புக் கரங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள். (படங்கள் அவ்வளவு அழகு, அதிலும் மாயாவின் தோற்றம் ”செம”) Thanks to Nandhini JS and Sivappu Kal MookuthiTeam. Best wishes for a very grand success of this spectacular venture.

Cable Sankar

Filmmaker, Writer, Film Critic, Distributor & Exhibitor
Cable sankar - Tamil Comics - Sivappu Kal Mookuthi
இயக்குனர் ஜே.எஸ்.நந்தினியின்  புதிய அவதாரம். கிராபிக்ஸ் நாவல். சூப்பர் ஹீரோக்கள் எல்லோரும் கார்ட்டூனிலிருந்து தான் திரைக்கு வந்தவர்கள். அது போல.. தமிழில் நேரடியாய் காமிக்ஸ்கள் மிகக் குறைவு என்று நினைக்கிறேன். அதை “இந்த சிவப்புக்கல் மூக்குத்தி “ மூலம் ஜே.எஸ்.நந்தினி ஜனரஞ்சகப்படுத்த வந்திருக்கிறார். காதல், சோகம், திரில், பேய், பேண்டஸி, சயின்ஸ் பிக்‌ஷன் என கலந்துகட்டப்பட்ட கதையமைப்பு, அழகான கேரக்டர் வடிவமைப்பு. கலர்புல் கண்டெண்ட். எல்லாம் சேர்ந்து விறு விறு, தட, தட, படக்கதை உங்களிடம். தொடர்ந்து நாம் கொடுக்கும் ஆதரவு மேலும் இம்மாதிரியான முயற்சிகளுக்கு ஊக்கமும், நம்மூர் சக்திமான் போல புதிய புதிய கேரக்டர்களை வைத்து வித்யாச முயற்சிகளுக்கு வித்திடும். ஆன்லைனில் தமிழ் மற்றும் ஆங்கில வர்ஷன் வெளிவந்திருக்கிறது.

Prabhu Balasubramaniam

Tamil Comics Fan
Prabhu balasubramaniam - Tamil Comics
வருண் பிசினஸ் விஷயமாக காதலி மாயாவோடு ஊட்டி பொன்வனம் எஸ்டேட் செல்கிறான். அங்கே நடக்கும் சில மர்மமான விஷயங்களும் அதை தொடர்ந்து நிகழும் அமானுஷ்ய சம்பவங்களும் அதில் சிக்கிக் கொண்ட மாயாவின் நிலையும்தான் கதை.
விறுவிறுப்பான நடை. எதிர் பார்க்காத திருப்பங்கள். நேர்த்தியான Illustrations. நீங்கள் சினிமா ரசிகர் என்றால் அட்டகாசமான ஒரு ஃபேன்டசி படம் பார்த்த திருப்தியும், நாவல் வாசகர் என்றால் விறுவிறுப்பான ஒரு ஃபேன்டசி நாவல் படித்த உணர்வும் இந்த காமிக்ஸ் படிக்கும் போது நிச்சயம் கிடைக்கும்.
உங்கள் இந்த புதிய முயற்சி வெற்றி பெறவும், மேலும் பல வெற்றிகள் பெறவும் வாழ்த்துகள், Nandhini JS.

மேலும் படிக்க - http://www.mbcomicstudio.com/reviews

No comments: